புதுடெல்லி: ஓய்வுபெற்ற ராணுவத்தினருக்கு ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில் நிலுவைத் தொகையை 3 மாதங்களுக்குள் ஒட்டுமொத்தமாக வழங்குமாறு
பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உச்ச நீதின்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது. பிறகு இந்தக் காலக்கெடு கடந்த ஆண்டு செப்டம்பரில் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. பிறகு கடந்த ஜனவரி 9-ம் தேதி இந்த காலக்கெடு மார்ச் 15 வரை மேலும் நீட்டிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற ராணுவத்தினருக்கு ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Author: செய்திப்பிரிவு