சென்னை: ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் பொருட்களை வழங்க மறுத்தால், சம்பந்தப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர், ஆய்வு அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்களுக்கு, பதிவாளர் சண்முக சுந்தரம் அனுப்பியுள்ளசுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் கடந்த 2020 அக்.1-ம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டப்படி, பொருட்களைப் பெற ரேஷன் கடைகளுக்கு வரும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, உரிய பொருட்களை கைவிரல் ரேகை அங்கீகரித்தல் மூலம் விநியோகிக்க வேண்டும்.
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் பொருட்களை வழங்க மறுத்தால், சம்பந்தப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர், ஆய்வு அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் எச்சரித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு