சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம், நடைபாதையில் வணிகம் செய்பவர்கள், மீனவ பெண்கள், கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளோர், வீடுகளில் வேலை செய்பவர்கள் உட்பட 1 கோடி குடும்பத் தலைவிகள் பயன்பெறுவார்கள். மாதம் ரூ.1,000 உதவித் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்பது, திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்.15-ல் முதல்வர் தொடங்கி வைப்பார் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம், நடைபாதையில் வணிகம் செய்பவர்கள், மீனவ பெண்கள், கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளோர், வீடுகளில் வேலை செய்பவர்கள் உட்பட 1 கோடி குடும்பத் தலைவிகள் பயன்பெறுவார்கள். மாதம் ரூ.1,000 உதவித் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு