பார்சிலோனா: நடப்பு ஆண்டுக்கான ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற பார்சிலோனா மொபைல் வேர்ல்ட் மாநாட்டில் ஒப்போ, டெக்னோ, ஹானர், மோட்டோரோலா போன்ற முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மடிக்கக்கூடிய வகையிலான ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை டெமோ காட்டி உள்ளன. இது இந்த நிகழ்வின் ஹைலைட்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
இன்றைய ஸ்மார்ட் டிஜிட்டல் யுகத்தில் வசித்து வரும் மக்களுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது ஸ்மார்ட்போன்கள். அது பள்ளி செல்லும் குழந்தைகள் தொடங்கி அனைத்து வயதினருக்கும் பொருந்தும். செல்போனை வடிவமைத்த மார்ட்டின் கூப்பர் கூட பின்னாளில் அதன் பரிணாம வளர்ச்சியானது இப்படி எல்லாம் இருக்கும் என கணித்திருக்கமாட்டார். அந்த அளவிற்கு மாற்றம் கண்டுள்ளது செல்போன்.
நடப்பு ஆண்டுக்கான ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற பார்சிலோனா மொபைல் வேர்ல்ட் மாநாட்டில் ஒப்போ, டெக்னோ, ஹானர், மோட்டோரோலா போன்ற முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மடிக்கக்கூடிய வகையிலான ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை டெமோ காட்டி உள்ளன. இது இந்த நிகழ்வின் ஹைலைட்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
எல்லுச்சாமி கார்த்திக்