சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு கறுப்பு சேலை அணிந்து வந்த பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீநிவாசனிடம் அங்கிருந்த நிருபர்கள் "நீங்கள் காங்கிரஸ் போராட்டத்தை ஆதரிக்கிறீர்களா?" எனக் கேட்க, "ஐயோ இன்னிக்கா அது. எனக்குத் தெரியாதே" என்று கூறி சிரித்தபடியே நகர்ந்து சென்றார். அவரது கறுப்பு நிற ஆடையால் சட்டப்பேரவைக்கு வெளியேயும் உள்ளேயும் இன்று சில சுவாரஸ்ய நிகழ்வுகள் நடந்தன.
முன்னதாக, ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்து இன்று (மார்ச் 27) காலை சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கறுப்புச் சட்டை அணிந்துவந்தனர். மேலும், ராகுல் காந்தியை ஆதரித்து பதாகைகளையும் கொண்டுவந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, "தடையாணை வாங்கியிருந்த வழக்கை எடுத்து நடத்தியுள்ளனர். இந்திய வரலாற்றில் முதல் முறையாக வழக்கு தொடர்ந்தவரே தடை வாங்குகிறார். அதுவும் 24 நாட்களில் வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பையும் வழங்கியுள்ளனர். தீர்ப்பு வழங்கப்பட்ட 24 மணி நேரத்தில் ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது ஜனநாயகப் படுகொலை.
தமிழக சட்டப்பேரவைக்கு கறுப்பு சேலை அணிந்துவந்த பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீநிவாசனிடம் அங்கிருந்த நிருபர்கள் “நீங்கள் காங்கிரஸ் போராட்டத்தை ஆதரிக்கிறீர்களா?” எனக் கேட்க, “ஐயோ இன்னிக்கா அது. எனக்குத் தெரியாதே” என்று கூறி சிரித்தபடியே நகர்ந்து சென்றார்.
Author: செய்திப்பிரிவு