புதுச்சேரி: ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் வராதோர் மற்றும் சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளுக்கு உயர் சிகிச்சைகளுக்கு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்க இருப்பதாக ஜிப்மர் அறிவித்துள்ளது. மொத்தம் 63 வகையான உயர் சிகிச்சைகளுக்கு ரூ. 500 முதல் ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் அனைத்து துறை தலைவர்களுக்கு அனுப்பிய உத்தரவு விவரம்: "ஜிப்மரில் சமீபத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட புதிய மேம்பட்ட உயர் மதிப்பு விசாரணைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வராத மற்றும் ஏழைகளுக்கான சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளிடமிருந்து பயன்பாட்டு கட்டணங்கள் ஏப்ரல் 1 முதல் வசூலிக்கப்படும். அத்தொகை நிறுவன வருவாய் கணக்கில் துறைகள் வரவு வைக்க வேண்டும்.
ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் வராதோர் மற்றும் சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளுக்கு உயர் சிகிச்சைகளுக்கு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்க இருப்பதாக ஜிப்மர் அறிவித்துள்ளது
Author: செ. ஞானபிரகாஷ்