டெல்லி: மக்களவை உறுப்பினர் என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். ராகுல் காந்தி கடந்த 2004 பொதுத் தேர்தலில் உபியின் அமேதி தொகுதியில் வெற்றி பெற்று எம்பி ஆனதைத் தொடர்ந்து, 2005ம் ஆண்டு முதல் அவருக்கு ஒதுக்கப்பட்ட எண் 12, துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார். இதனிடையே பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறு பேசியதாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. சிறை தண்டனையை அடுத்து தற்போது ராகுலின் எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வரும் ஏப்ரல் 22ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்யுமாறு மக்களவை வீட்டு வசதிக் குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. எம்பி ஒருவர் தனது பதவியை இழந்த ஒரு மாதத்திற்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்பது விதிமுறை என அதிகாரிகள் கூறி உள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மக்களவை துணை செயலாளரான மோஹித் ராஜனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 20 ஆண்டுகளாக அரசு பங்களாவில் இருந்த என்னுடைய மகிழ்ச்சியான தருணங்களை மறக்க முடியாது. ஏப்ரல் 22ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்கிறேன். விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கிறேன்,’ எனத் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 22ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்கிறேன் : ராகுல் காந்தி அறிவிப்பு!!
Advertisement
Advertisement