சென்னை: மாநகரங்களான கோவை, மதுரையை மேம்படுத்த எழில்மிகு கோவை, மாமதுரை ஆகிய ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரங்களான கோவை, மதுரை மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கி அனைத்து மக்களின் பங்களிப்புடன் எழில்மிகு கோவை, மாமதுரை என்ற ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்கப்படும். பசுமையான பூங்காக்கள், தூய்மையான தெருக்கள், அனைவருக்கும் சுத்தமான குடிநீர், பாதுகாப்பான போக்குவரத்து அமைப்புகள், தொழில் பூங்காக்கள், தரமான வீட்டு வசதி போன்றவை இத்திட்டத்தில் இடம்பெறும். தலா ரூ.1 கோடி செலவில் இத்திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்படும்.
மாநகரங்களான கோவை, மதுரையை மேம்படுத்த எழில்மிகு கோவை, மாமதுரை ஆகிய ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
Author: செய்திப்பிரிவு