மேட்டூர்: தமிழக – கர்நாடக எல்லையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து, இரு மாநில அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ள மாதேஸ்வரன் கோயில் அருகே ரூ.20 கோடியில் 108 அடி உயரத்தில் புலி வாகனத்தில் மாதேஸ்வரன் சுவாமி அமர்ந்துள்ளது போல் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையை, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டப்பேரவைஉறுப்பினர் சதாசிவம் கலந்து கொண்டார். அப்போது அவர் கர்நாடக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
மனுவில், கொளத்தூர் அருகே தமிழக – கர்நாடக எல்லையான பாலாறு வனப்பகுதியில், மீன் பிடிக்கும் தொழிலாளர்களுக்கு தொல்லை தரக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து தெரிவித்திருந்தார்.
Author: செய்திப்பிரிவு