புதுடெல்லி: ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில், மேல் நீதிமன்றம் தண்டனைக்கு தடை விதிப்பதன் மூலம் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக முடியும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தீர்ப்பின் பின்னணி: கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?" என்று விமர்சித்திருந்தார்.
ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில், மேல் நீதிமன்றம் தண்டனைக்கு தடை விதிப்பதன் மூலம் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக முடியும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Author: செய்திப்பிரிவு