சென்னை: “நான் வெளியிட்ட வங்கி பரிவர்த்தனைகளின் மூலமாக எனது நண்பர்களின் விவரங்களும் பொதுவெளியில் வெளியானதால், நண்பர்களிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறேன்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், திமுகவினரின் சொத்துப் பட்டியல் என்றும், தனது ரஃபேல் வாட்ச் தொடர்பான விவரங்கள் என்றும் சில தகவல்களை www.enmannenmakkal.com என்ற வலைதளம் வாயிலாக அண்ணாமலை நேற்று வெளியிட்டார். இந்நிலையில், இது தொடர்பாக இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“நான் வெளியிட்ட வங்கி பரிவர்த்தனைகளின் மூலமாக எனது நண்பர்களின் விவரங்களும் பொதுவெளியில் வெளியானதால், நண்பர்களிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறேன்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு