மாண்டியா: "தாய்மார்கள், சகோதரிகள் உள்ளிட்ட நாட்டு மக்களின் ஆசிர்வாதம் எனக்கு பாதுகாப்பு கவசமாக இருப்பதை அறியாமல் காங்கிரஸ் கட்சி எனக்கு குழி பறிக்கும் கனவை காண்கிறது" என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மாண்டியாவில் இன்று பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூரு – மைசூரு இடையேயான‌ 118 கி.மீ. தூர 10 வழி நெடுஞ்சாலை, ஹுப்ளி – தார்வாட் இடையிலான சாலையை திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனால் இப்பகுதியின் சமூக பொருளாதார வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில், சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாயிலான மக்கள் நல திட்ட பணிகளைத் தொடங்கிவைத்தார் பிரதமர்.
தாய்மார்கள், சகோதரிகள் உள்ளிட்ட நாட்டு மக்களின் ஆசிர்வாதம் எனக்கு பாதுகாப்பு கவசமாக இருப்பதை அறியாமல், காங்கிரஸ் கட்சி எனக்கு கல்லறைத் தோண்ட காங்கிரஸ் கட்சி கனவு காண்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
Author: செய்திப்பிரிவு