“எதிர்க்கட்சிகளுக்கு சிபிஐ சோதனை; பழைய நண்பனுக்கு உதவி” – மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

13

புதுடெல்லி: அமலாக்கத்துறையும், சிபிஐயை வைத்து எதிர்க்கட்சித் தலைவர்களைப் பின்தொடரும் மத்திய அரசு, நாட்டிலிருந்து தப்பியோடியவர்களுக்கு சலுகை காட்டிவருவதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இன்டர்போலின் ரெட் நோட்டீஸ் பட்டியலில் இருந்து தப்பியோடிய வைர வியாபாரி மெகுல் சோக்சியின் பெயர் நீக்கப்பட்டிருப்பது தொடர்பாக கார்கே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வைர வியாரியும், கீதாஞ்சலி ஜெம்ஸ் உரிமையாளருமான மெகுல் சோக்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். அவர் மீது இன்டர்போல் கடந்த 2018 ஆம் ஆண்டு ரெட் நோட்டீஸ் வழங்கியது. இந்தநிலையில் இன்டர்போலிற்கு அவர் அளித்த மனுவின் அடிப்படையில் அவரது பெயர் ரெட் நோட்டீஸ் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமலாக்கத்துறையும், சிபிஐயை வைத்து எதிர்க்கட்சித் தலைவர்களைப் பின்தொடரும் மத்திய அரசு, நாட்டிலிருந்து தப்பியோடியவர்கள்களுக்கு சலுகை காட்டிவருவதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.