Advertisement
ஜெனிவா: ஐ.நா. சபைக் கூட்டத்தில் நித்தியானந்தாவின் ‘கைலாசா’ பிரதிநிதி கலந்துகொண்டது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவில் நித்தியானந்தா மீது கடத்தல், குழந்தைகளைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். தப்பிச் சென்ற நித்யானந்தா மத்திய ஈக்வடாரில் தீவு ஒன்றை வாங்கி அதற்கு கைலாச நாடு என்ற பெயரிட்டு அதற்கான கொடியையும் வெளியிட்டதாக தகவல் வெளியானது. அந்த நாடு குறித்து www.kailaasa.org என்ற இணையதளத்தில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
ஐ.நா. சபைக் கூட்டத்தில் நித்தியானந்தாவின் ‘கைலாசா’ பிரதிநிதி கலந்துகொண்டது கவனத்தை ஈர்த்துள்ளது.
Author: செய்திப்பிரிவு
Advertisement