ஒட்டுமொத்த இந்தியாவும் ஊரடங்குக்குள் முடங்கி இன்றுடன் மூன்றாவது நாள். இந்த நாட்களில், நம் அன்றாட வாழ்வில் மிகவும் அவசியமான மனிதர்களின் முக்கியத்துவம் நமக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது. முன்பெல்லாம் "இது அவருடைய வேலை, கடமை. அவர்தான் செய்ய வேண்டும்" என மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டுக் கடந்துவிடுவோம்.
கரோனா பெருந்தொற்றின் முன்பு அச்சத்துடன் தங்கள் கடமைகளைச் செய்துவரும் துப்புரவுப் பணியாளர்கள், பக்கத்து தெரு மளிகை கடைக்காரர், காவலாளி, மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்பவர், போக்குவரத்து ஊழியர்கள் என, அத்தனை சாமானியர்களின் கடமையையும், தேவையையும் நாம் உணரத் தொடங்கியிருக்கிறோம்.
வீட்டிலும் இருக்க முடியாமல், வெளியே சென்றால் சமூக இடைவெளியையும் கடைபிடிக்க முடியாமல், தமிழகத்தின் துப்புரவு தொழிலாளர்கள், தொற்று தமக்கு வந்துவிடுமோ என்ற பேரச்சத்திலும் மக்கள் கடமையாற்றிக்கொண்டிருக்கின்றனர்.
நந்தினி வெள்ளைச்சாமி