புதுடெல்லி: ‘‘நாட்டில் இருந்து ஊழல் மற்றும் குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும்’’ என்று பிரதமர் மோடி உறுதியாக தெரிவித்தார். பாஜகவின் 44-வது நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கட்சித் தொண்டர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக பேசியதாவது.
சமூக நீதி பற்றி எதிர்க்கட்சிகள் பேச மட்டுமே செய்கின்றன. ஆனால் பாஜக மட்டுமே ஒவ்வொரு இந்தியனுக்கும் உதவிட பாடுபட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக இருக்கிறோம் என்பதற்காக நாம் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. 2024 தேர்தலில் பாஜகவை யாராலும் தோற்கடிக்க முடியாது என மக்கள் ஏற்கெனவே சொல்லத் தொடங்கிவிட்டனர். இது உண்மைதான். என்றாலும் பாஜக தொண்டர்களாகிய நாம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் இதயத்தையும் வெல்ல வேண்டும்.
‘‘நாட்டில் இருந்து ஊழல் மற்றும் குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும்’’ என்று பிரதமர் மோடி உறுதியாக தெரிவித்தார்
Author: செய்திப்பிரிவு