Advertisement
சென்னை: ஊதிய உயர்வு அரசாணையை அமல்படுத்த கோரி அரசு மருத்துவர்கள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத்தலைவர் செந்தில், பொதுச் செயலாளார் ரவிசங்கர், தலைமை நிலைய செயலாளர் சந்திரசேகர் உட்பட 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அறிவிக்கப்பட்ட அரசாணை 354-ன்படி, பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற அறிவிப்பில் மருத்துவர்கள் சங்கங்களுக்குள் இருவேறு கருத்துநிலவி வருகிறது.
Author: செய்திப்பிரிவு
Advertisement