பாரீஸ்: பிரான்ஸில் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்ந்தும் அதிபர் மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. தொடர் போராட்டங்கள் காரணமாக பிரான்ஸில் உள்நாட்டு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக அந்நாட்டில் கடந்த 20 நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த பத்து நாட்களாக போராட்டம் தீவிர நிலையை அடைந்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்ரோனுக்கு இந்தப் போராட்டம் பெரிய சவாலாக மாறியுள்ளது. கிழக்கு பாரீஸ் ரயில் நிலையம் மற்றும் வங்கிகளில் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்தனர். மேலும், போராட்டக்காரர்கள் 27 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பிரான்ஸில் ஓய்வு பெறும் வயதை 62 லிருந்து 64 ஆக உயர்ந்தும் அதிபர் மக்ரோனின் சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டத்தில் வன்முறையில் வெடித்தது.
Author: செய்திப்பிரிவு