சென்னை: உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.2,302 கோடியில் புதிய காலணி உற்பத்தி ஆலை அமைப்பது தொடர்பாக தைவானின் ஹைக்ளோரி ஃபுட் வேர் நிறுவனம் மற்றும் தமிழக தொழில் துறை இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கும் தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை விரைவில் அடைய, தமிழக தொழில் துறை, உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமின்றி, பெருமளவில் வேலைவாய்ப்பு அளிக்கும் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.2,302 கோடியில் புதிய காலணி உற்பத்தி ஆலை அமைப்பது தொடர்பாக தைவானின் ஹைக்ளோரி ஃபுட் வேர் நிறுவனம் மற்றும் தமிழக தொழில் துறை இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
Author: செய்திப்பிரிவு