Advertisement
பொதுவாக குழந்தைகளே பேரிடரால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் மற்றெந்த பேரிடரைக் காட்டிலும் கரோனா நம்முடன் தொடர்ந்து பயணிக்கிறது. அதனால் கரோனா பேரிடரால், ஊரடங்கால் மனதளவில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, பள்ளிக்குச் செல்லும் முன்பே உளவியல் சிகிச்சை அளிக்கவேண்டியது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.
இதற்கிடையே கரோனா பேரிடர் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உளவியல் முதலுதவி வழங்க, அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அண்மையில் ஆன்லைன் பயிற்சி அளிக்கப்பட்டது. மைண்ட் ஜோன் என்னும் மனநல மருத்துவமனை, ஆசிரியர்களுக்கு உளவியல் முதலுதவிப் பயிற்சி அளித்தது.
கரோனா பேரிடரால் மனதளவில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, பள்ளிக்குச் செல்லும் முன்பே உளவியல் சிகிச்சை அளிக்கவேண்டியது அவசியம்.
க.சே.ரமணி பிரபா தேவி
Advertisement