வாஷிங்டன்: உலக வங்கியின் தலைவராக உள்ள டேவிட் மால்பஸ் பதவிக் காலம் 2024 ஏப்ரல் வரை உள்ளது. இந்நிலையில், வரும் ஜூன் மாதம் பதவி விலகப் போவதாக மால்பஸ் கடந்த வாரம் அறிவித்தார். இதையடுத்து வரும் மே மாதம் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியானது.
இந்நிலையில், உலக வங்கியின் புதிய தலைவராக இந்தியரான அஜய் பங்கா நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த நியமனத்துக்கு உலக வங்கியின் இயக்குநர்கள் வாரியம் ஒப்புதல் அளித்துவிட்டால், உலக வங்கியின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமை அஜய் பங்காவுக்கு கிடைக்கும்.
உலக வங்கியின் தலைவராக உள்ள டேவிட் மால்பஸ் பதவிக் காலம் 2024 ஏப்ரல் வரை உள்ளது. இந்நிலையில், வரும் ஜூன் மாதம் பதவி விலகப் போவதாக மால்பஸ் கடந்த வாரம் அறிவித்தார். இதையடுத்து வரும் மே மாதம் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியானது.
Author: செய்திப்பிரிவு