பிரயாக்ராஜ்: உமேஷ் பால் கடத்தல் வழக்கில் உத்தரப் பிரதேசத்தின் கேங்க்ஸ்டரும், முன்னாள் எம்எல்ஏவுமான அத்திக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அத்திக், தினேஷ் பாஸி, கான் சவுகத் ஆகிய மூன்ற குற்றவாளிகளுக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அக்திக் அகமதுவின் சகோதரர் காலீது அசீம் உள்ளிட்ட 7 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக அக்திக் அகமது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கிலிருந்து அவருக்கு பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்ததோடு உயர் நீதிமன்றத்தையே அணுகுமாறு தெரிவித்துவிட்டது.
உமேஷ் பால் கடத்தல் வழக்கில் உத்தரப் பிரதேசத்தின் கேங்க்ஸ்டரும், முன்னாள் எம்எல்ஏவுமான அத்திக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Author: செய்திப்பிரிவு