Advertisement
லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார்.
உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி அத்தீக் அகமது நேற்று முன்தினம் இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். அன்றிரவு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் உயர் நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா, காவல் துறை தலைவர் ராஜ்குமார் விஸ்வகர்மா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement