Advertisement
புதுடெல்லி: சர்வதேச சிறுதானியங்கள் கருத்தரங்கு டெல்லியில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த கருத்தரங்கை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது நினைவு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டு பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்தது. இது நம் நாட்டுக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம் ஆகும். சர்வதேச அளவில் சிறுதானியங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க இந்தியா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சர்வதேச சிறுதானியங்கள் கருத்தரங்கு டெல்லியில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த கருத்தரங்கை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement