உடுமலை: உடுமலையை அடுத்த குடிமங்கலம் ஒன்றியம் வடுகபாளையம் ஊராட்சிக்குட்பட்ட லிங்கம்மநாயக்கன்புதூரில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். அங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் பலருக்கும் வீட்டுமனை இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதே ஊரில் தனியார் ஒருவரால் அவருக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலம், குளம் அமைக்கும் நோக்கத்துக்காக ஊராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த நிலத்தை தங்களுக்கு வீட்டுமனைகளாக ஒதுக்கி தருமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். அதிகாரிகள் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படாததால், தாங்களாகவே அந்த இடத்தில் குடியேற போவதாக தெரிவித்தனர்.
உடுமலையை அடுத்த குடிமங்கலம் ஒன்றியம் வடுகபாளையம் ஊராட்சிக்குட்பட்ட லிங்கம்மநாயக்கன்புதூரில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். அங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் பலருக்கும் வீட்டுமனை இல்லை எனக் கூறப்படுகிறது.
Author: செய்திப்பிரிவு