உடல் பருமன் சிகிச்சைக்கான மருந்துகள் முதன்முறையாக உலக சுகாதார நிறுவனத்தின் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இடம்பெறும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு இப்போதே ஆதரவு, எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன.
உலக சுகாதார நிறுவனத்தின் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலானது குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளின் அரசாங்கங்களை மருந்து கொள்முதலில் வழிநடத்துகிறது. ஏதேனும் ஜெனரிக் மருந்துகள் இந்நிறுவனத்தின் பட்டியலில் இடம்பெறும்போது அதன் மீதான நம்பிக்கை அதிகரிக்கிறது. இந்நிலையில், இந்தப் பட்டியலில் முதன்முறையாக உடல் பருமன் தொடர்பான மருந்துகள் இடம்பெறலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது. இதற்காக, உலக சுகாதார நிறுவனத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவானது அடுத்த மாதம் தொடங்கி உடல் பருமன் சிகிச்சை மருந்துகளை ஆய்வு செய்யும். பின்னர் செப்டம்பர் மாதம் புதுப்பிக்கப்பட்ட அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை வெளியிடும். ஒருவேளை பரிந்துரை ஏற்கப்பட்டால் புதிய பட்டியலில் உடல் பருமன் சிகிச்சை மருந்துகள் இடம்பெறும்.
உடல்பருமனை எதிர்த்து செயல்படும் மருந்துகள் முதன்முறையாக உலக சுகாதார நிறுவனத்தின் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இடம்பெறும் சூழல் உருவாகியுள்ளது.
Authour: செய்திப்பிரிவு