Advertisement
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே மன்னிப்பு கோரிய ராகுல், இப்போது தான் ஒரு கோழை இல்லை என்று கூறுகிறார் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உள்ளது. இதனால் எம்.பி. பதவியை இழந்த ராகுல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “என்னுடைய பெயர் சாவர்க்கர் அல்ல. என் பெயர் காந்தி. காந்தி யாரிடமும் மன்னிப்பு கோரமாட்டார்” என்றார்.
உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே மன்னிப்பு கோரிய ராகுல், இப்போது தான் ஒரு கோழை இல்லை என்று கூறுகிறார் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement