புதுடெல்லி: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா உடனான நட்பை இந்தியா பயன்படுத்தும் என்று நம்புவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் டொனால்ட் லு தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு முடிந்துள்ள நிலையில், இது தொடர்பாக டொனால்ட் லு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ''ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு மிக நீண்ட கால நட்பு இருக்கிறது. பனிப்போர் காலத்தில் இருந்தே இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான, மிக நீண்ட நட்பு இருந்து வருகிறது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யாவிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கை இந்தியா பயன்படுத்தும் என்று நம்புகிறோம்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா உடனான நட்பை இந்தியா பயன்படுத்தும் என்று நம்புவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை உதவி அமைச்சர் டொனால்ட் லு தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு