கீவ்: உக்ரைன் கூட்டுப் படைகளின் கமாண்டர் எட்வர்ட் மைக்கைலோவிச் மொஸ்கலோவ் என்பவரை அதிரடியாக நீக்கி, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டுள்ளார். ஆனால், நீக்கத்துக்கான காரணம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.
ரஷ்யா – உக்ரைன் போர் தொடக்கியபோது கடந்த ஆண்டு மார்ச் மாதம் உக்ரைன் ராணுவ கூட்டுப் படையின் கமாண்டராக எட்வர்ட் மைக்கைலோவிச் மொஸ்கலோவ் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் கடந்த சில மாதங்களாகவே உயரதிகாரிகளை தொடர்ந்து பணி நீக்கம் செய்து வந்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. அந்த வகையில் மொஸ்கலோவ்வும் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
உக்ரைன் கூட்டுப் படைகளின் கமாண்டர் எட்வர்ட் மைக்கைலோவிச் மொஸ்கலோவ் என்பவரை அதிரடியாக நீக்கி, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டுள்ளார். ஆனால், நீக்கத்துக்கான காரணம் எதையும் வர் தெரிவிக்கவில்லை.
Author: செய்திப்பிரிவு