சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் சிவகுமார் வீடு உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசு அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சோதனை நடத்தினர். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரொக்கம் கைப்பற்றப்பட்டன.
வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டிஆர்டிஏ) திட்ட இயக்குநராக பணியாற்றுபவர் ஆர்த்தி (40). இவரது கணவர் ஆனந்தமூர்த்தி (46), தருமபுரி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர், அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் ரூ.1 கோடிக்கு சொத்துகள் வாங்கிய புகாரின்பேரில் கடந்த ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் சிவகுமார் வீடு உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசு அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சோதனை நடத்தினர்.
Author: செய்திப்பிரிவு