இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் இளை யான்குடி அருகே தொடக்கப் பள்ளி சமையலறை கட்டிடத் திறப்பு விழா கல்வெட்டில் மாவட்ட கவுன்சிலரான தனது மனைவியின் பெயர் இல்லாத ஆத்திரத்தில் கல்வெட்டை அதிமுக பிரமுகர் அடித்து நொறுக்கினார்.
இளையான்குடி அருகே விஜயன்குடியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ரூ.6 லட்சத்தில் சமையலறை கட்டப் பட்டது. இக்கட்டிடத்தை நேற்று மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி திறக்க இருந்தார். இதற்காக கட்டிடத்தில் கல்வெட்டு வைக் கப்பட்டது. ஆனால் கல்வெட்டில் அப்பகுதி மாவட்ட கவுன்சிலர் மகேஸ்வரி பெயர் இடம்பெறவில்லை.
சிவகங்கை மாவட்டம் இளை யான்குடி அருகே தொடக்கப் பள்ளி சமையலறை கட்டிடத் திறப்பு விழா கல்வெட்டில் மாவட்ட கவுன்சிலரான தனது மனைவியின் பெயர் இல்லாத ஆத்திரத்தில் கல்வெட்டை அதிமுக பிரமுகர் அடித்து நொறுக்கினார்.
Author: செய்திப்பிரிவு