நியூயார்க்: பெண்களை இல்லத்தரசிகளாக மட்டும் பார்க்காமல் தேசத்தை கட்டமைப்பவர்களாகவும் நம்புகிறார் இந்தியப் பிரதமர் மோடி என்று ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ருசிரா கம்போஜ் கூறினார்.
சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர தூதர் ருசிரா கம்போஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: மகளிர் மற்றும் சிறுமிகள் பயன் அடைவதற்காக புதிய தொழில் நுட்பங்களை குவித்து புதிய இந்தியாவானது இன்று இயங்கி வருகிறது. பெண்களை இல்லத்தரசிகளாக மட்டுமே இனி பார்க்கக்கூடாது. அவர்களைதேசத்தை கட்டமைப்பவர்களாக வும் நம்புகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
பெண்களை இல்லத்தரசிகளாக மட்டும் பார்க்காமல் தேசத்தை கட்டமைப்பவர்களாகவும் நம்புகிறார் இந்தியப் பிரதமர் மோடி என்று ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ருசிரா கம்போஜ் கூறினார்.
Author: செய்திப்பிரிவு