சென்னை: "எதிர்க்கட்சிகளைக் குறி வைத்து வந்த பாஜகவின் போக்கு, தற்போது ஜனநாயக உரிமைகளையே காலில் போட்டு நசுக்குவதில் வந்து முடிந்திருக்கிறது. இத்தகைய அக்கிரமங்கள் விரைவில் முடிவுக்கு வரும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில், "தாம் தவறான எண்ணத்துடன் கூறவில்லை என அவரே விளக்கம் அளித்துவிட்ட பின்னரும், ராகுல் காந்தியைப் போன்ற ஒரு தலைவரை அவரது பேச்சுக்காகத் தண்டித்துள்ளது மிகவும் வருந்தத்தக்கது என்பதோடு, இதுவரை நாம் பார்த்திராத ஒன்றாகும்.
எதிர்க்கட்சிகளைக் குறி வைத்து வந்த பாஜகவின் போக்கு, தற்போது ஜனநாயக உரிமைகளையே காலில் போட்டு நசுக்குவதில் வந்து முடிந்திருக்கிறது. இத்தகைய அக்கிரமங்கள் விரைவில் முடிவுக்கு வரும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Author: செய்திப்பிரிவு