ராமநாதபுரம்: கமுதி அருகே பெருநாழியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் இருதய நோய் சிகிச்சைக்கு முதல்வர் உதவி செய்ய வேண்டும் என வீடியோ வெளியிட்ட 24 மணி நேரத்தில் சுகாதாரத்துறையினர் வீட்டிற்கு வந்து சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெருநாழி சண்முகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரஞ்சித், சரண்யா தம்பதியினர். இவர்களுக்கு கஜன் (4) என்ற மகன் உள்ளார். சிறுவன் கஜனுக்கு இதயத்தில் துளை மற்றும் இதயத்திற்கு வந்து செல்லும் ரத்தம் மாற்று குழாயில் செல்லும் பிரச்சினை இருந்து வருகிறது. கஜனை பரிசோதித்த மருத்துவர்கள் 5 வயதிற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். இதயத்துளை அடைப்பு அறுவை சிகிச்சைக்கு ரூ.7 லட்சம் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கமுதி அருகே பெருநாழியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் இருதய நோய் சிகிச்சைக்கு முதல்வர் உதவி செய்ய வேண்டும் என வீடியோ வெளியிட்ட 24 மணி நேரத்தில் சுகாதாரத்துறையினர் வீட்டிற்கு வந்து சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.
Author: கி.தனபாலன்