சியோல்: கரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இணைய வழியில் நடந்த பொங்கல் விழா, இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி 12-ம் தேதி நேரடியாக கொண்டாடப்பட்டது.
தென்கொரியாவில், கொரிய தமிழ்ச் சங்கத்தின் 2023-ம் ஆண்டு தமிழர் திருநாள் , பிப்ரவரி 12-ம் தேதியன்று கச்சான் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கொரியாவில் கரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, பொங்கல் நிகழ்வுகள் இணையவழி மூலமாக நடைபெற்று வந்தது. இவ்வாண்டு பொங்கல் நிகழ்வுகள் நேரடி விழாவாக முன்னெடுக்கப்பட்டது. கொரியாவின் பல்வேறு பகுதிகளிருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 200-விற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
கரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இணைய வழியில் நடந்த பொங்கல் விழா, இந்தாண்டு கடந்த பிப்ரவரி 12-ம் தேதி நேரடியாக கொண்டாடப்பட்டது.
Authour: செய்திப்பிரிவு