சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில் 3, 4, 5 ஆகிய வழித்தடங்களில் நீட்டிப்பு தொடர்பாக சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. மாதவரம்-சிறுசேரி வரை (45.8 கி.மீ.) 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை (26.1 கி.மீ. ) 4-வது வழித்தடத்திலும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை (47 கி.மீ) 5-வது வழித்தடத்திலும் என118.9 கி.மீ. தொலைவில் பணிகள் நடைபெறுகின்றன. இதுதவிர, இந்த வழித்தடங்களை நீட்டிக்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில் 3, 4, 5 ஆகிய வழித்தடங்களில் நீட்டிப்பு தொடர்பாக சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
Author: செய்திப்பிரிவு