Advertisement
சென்னை: இயந்திர கோளாறால் அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து சில இடங்களுக்கு பால் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இயந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் உதவி பொதுமேலாளர் (பொறியியல்) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தர உறுதி பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பால் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement