Advertisement
இஸ்லாமாபாத்: “இம்ரான் கான் கொல்லப்படுவார் அல்லது நாங்கள் கொல்லப்படுவோம்” என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ராணா சனாவுல்லா பேசும்போது, “பாகிஸ்தானின் ஆளும் கட்சிக்கு எதிரியாக இம்ரான் கான் இருக்கிறார். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தானின் அரசியலைக் கொண்டு சென்றிருக்கும் பாதையால் ஒன்று அவர் கொல்லப்படுவார் அல்லது நாங்கள் கொல்லப்படுவோம். இம்ரான் கான் அரசியலை பகையாக மாற்றி இருக்கிறார். அவர் எங்கள் எதிரி. அவ்வாறே அவர் நடத்தப்படுவார்” என்று பேசினார்.
“இம்ரான் கான் கொல்லப்படுவார் அல்லது நாங்கள் கொல்லப்படுவோம்” என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Author: செய்திப்பிரிவு
Advertisement