வியட்நாம் போர் முதல் சூடானில் பசியால் எலும்பும் தோலுமாக வாடியிருக்கும் குழந்தையின் அவலம் வரை முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் இந்த உலகுக்கு புகைப்படங்கள் மூலமாகவே தெரியவந்திருக்கின்றன. அப்புகைப்படங்கள் இந்த சமூகத்தின் வழி ஏற்படுத்தும் தாக்கங்கள் அதிகம்.
துப்புரவுப் பணியாளர்களின் சமூக அவலம், புறக்கணிப்பு, நோய்மை, இறப்பு, கையறுநிலையில் உள்ள மனைவி, ஆதரவற்ற நிலையில் இருக்கும் அவர்களின் பிஞ்சுக் குழந்தைகள் என, துப்புரவுப் பணியாளர்களின் வாழ்வியலை 'நானும் ஒரு குழந்தை' புகைப்படக் கண்காட்சியின் வழியாக சமூகத்திற்கு உணர்த்தியவர், புகைப்படக் கலைஞர் பழனிக்குமார்.
‘நானும் ஒரு குழந்தை’க்குப் பிறகு, கஜா புயல், சென்னை வறட்சி என பேரிடர்களில் பாதிக்கப்படும் விளிம்புநிலை மக்களை தொடர்ந்து தன் மூன்றாவது கண்ணான கேமரா வழி ஆவணப்படுத்திக் கொண்டே இருக்கிறார் பழனிக்குமார்.
நந்தினி வெள்ளைச்சாமி