Advertisement
கோவை: “இனி எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றிபெறும்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி கே.பழனிசாமி முதல்முறையாக இன்று (ஏப்.4) கோவை வந்தார். அவருக்கு தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், கோவை மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற வாழ்த்து தெரிவிக்கும் விழாவில் கலந்துகொண்டு கே.பழனிசாமி பேசியதாவது: “அதிமுகவில்தான் சாதாரண தொண்டன் கூட உச்சபட்ச பதவியான பொதுச் செயலாளர் பதவியை அடைய முடியும். வேறு எந்தக் கட்சியிலும் இது நடக்காது.
“இனி எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றிபெறும்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
Author: க.சக்திவேல்
Advertisement