மதுரை: கஜகஸ்தானில் ஜூலை மாதம் நடைபெறும் ‘பாரா சிட்டிங் வாலிபால்’ விளையாட்டுப்போட்டியில் பங்கேற்க இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள மதுரை அரசு சட்டக்கல்லூரி மாணவி மாற்றுத்திறனாளி அ.சங்கீதா, ரூ.2.15 லட்சம் நுழைவுக்கட்டணம் செலுத்த வழியில்லாததால் நிதி உதவி செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தார்.
மதுரை அரசு முத்துப்பட்டியைச் சேர்ந்த அ.சங்கீதா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். அம்மனுவில், "அரசுப்பள்ளிகளில் ஆரம்பக்கல்வி, மேல்நிலைக்கல்வி படித்து தற்போது மதுரை அரசு சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். எனது தந்தை மாற்றுத்திறனாளி. பெற்றோர் இருவரும் தையல் தொழிலாளிகள். என் குடும்பச்சூழலால் உதவிபெற்று படித்து வருகிறேன்.
கஜகஸ்தானில் ஜூலை மாதம் நடைபெறும் ‘பாரா சிட்டிங் வாலிபால்’ விளையாட்டுப்போட்டியில் பங்கேற்க இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள மதுரை அரசு சட்டக்கல்லூரி மாணவி மாற்றுத்திறனாளி அ.சங்கீதா, ரூ.2.15 லட்சம் நுழைவுக்கட்டணம் செலுத்த வழியில்லாததால் நிதி உதவி செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தார்.
Author: சுப. ஜனநாயகசெல்வம்