இந்தியாவில் 140 நாட்களுக்கு பிறகு 1300 பேருக்கு கொரோனா

14

புதுடெல்லி: இந்தியாவில் 140 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 1,300 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “நேற்று காலை 8 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் புதிதாக 1,300 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த 140 நாட்களுக்கு பிறகு அதிக பாதிப்பாகும்.  தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 7,605ஆக உள்ளது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 99 ஆயிரத்து 418ஆக உள்ளது.  கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் கொரோனாவுக்கு பலியானதால், மொத்த உயிரிழப்பு 5 லட்சத்து 30 ஆயிரத்து 816ஆக பதிவாகியுள்ளது.  தினசரி பாதிப்பு 1.46%. வாராந்திர பாதிப்பு 1.08% பலி 1.19% கடந்த 24 மணி நேரத்தில் 178 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 60 ஆயிரத்து 997ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 89,078 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.