புதுடெல்லி: சீனா, தென் கொரியாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரையைக் குறிப்பிட்டு, பாரதிய ஜனதா கட்சியை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக, பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட கூட்டம் நாடாளுமன்றத்தில் இன்று கூடியது. அப்போது இரு அவைகளிலும் ஆளும் பாஜக உறுப்பினர்கள், சமீபத்தில் இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் தவறாக பேசிய ராகுல் காந்தி தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குரல் எழுப்பினர். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டு மதியம் வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
சீனா, தென் கொரியாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரையைக் குறிப்பிட்டு, பாரதிய ஜனதா கட்சியை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு