“இதுவரை பார்த்திராத பேரழிவு” – இத்தாலியில் கனமழைக்கு 9 பேர் பலி; 100+ வீடுகள் சேதம்

23

ரோம்: இத்தாலியின் வடக்குப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, எமிலியா மாகாணத்தில் பெய்த கனமழையினால் அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தினால் தீவிர நிலச்சரிவும் (120-க்கும் அதிகமான நிலச்சரிவு பதிவுச் செய்யப்பட்டுள்ளது) ஏற்பட்டுள்ளது. இதுவரை வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெள்ளத்தால் 37 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஏராளமான விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழையினால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். தொடர் மழையால் ஃபார்முலா ஒன் போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.

இத்தாலியின் வடக்குப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்கு  வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.