விழுப்புரம்: விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் முகமது இப்ராஹீம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ்.எம்.அமீர்அப்பாஸ், தமுமுக மாநில செயலாளர் முஸ்தாக்தீன், மனிதநேய மக்கள் கட்சி மாநில வர்த்தக அணி பொருளாளர் அப்துல்ஹக்கீம், மாவட்டத் தலைவர்கள் பசல்முகமது, சையத் உஸ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச் சியை தொடங்கி வைத்தார்.
விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் முகமது இப்ராஹீம் தலைமை தாங்கினார்.
Author: செய்திப்பிரிவு