புதுடெல்லி: ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு தொடர்பாக, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டாவது நாளாக இன்றும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட கூட்டத்தொடர் நேற்று நாடாளுமன்றத்தில் தொடங்கியது. ராகுல் காந்தி தனது லண்டன் பேச்சு தொடர்பாக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் நேற்று அமளி ஏற்பட்டது. இதன் காரணமாக, இரு அவைகளும் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு தொடர்பாக, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டாவது நாளாக இன்றும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
Author: செய்திப்பிரிவு