சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை சுகாதாரத்துறையின் ஆய்வில் உள்ளது என தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் கடந்த 2022 ஆக.23-ம் தேதி தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக வி.கே.சசிகலா,டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரிடம் மீண்டும் விசாரணை நடத்த பரிந்துரை செய்திருந்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை சுகாதாரத்துறையின் ஆய்வில் உள்ளது என தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Author: செய்திப்பிரிவு