சேலம்: ''ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வளர்ச்சியைக் கண்டு திருமாவளவன் அச்சப்படுகிறார்'' என ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மாநிலத் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் ஆர்எஸ்எஸ் அகில பாரத பொதுக்குழு கூட்டம் ஹரியாணாவில் நடைபெற்றது குறித்தும் சேலத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வளர்ச்சிகள் குறித்தும் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய திட்டங்கள் பற்றி நடந்த விவாத கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் மாநிலத் தலைவர் குமாரசாமி பங்கேற்றார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தற்போது ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஆன்லைன் மூலமாக நாடு முழுவதிலும் இருந்து 7 லட்சத்து 25 ஆயிரம் பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் 4,848 பேர் சேர்ந்துள்ளனர்.
”ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வளர்ச்சியைக் கண்டு திருமாவளவன் அச்சப்படுகிறார்” என ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மாநிலத் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
Author: வி.சீனிவாசன்