ஆருத்ரா 'பலி ஆடு'… திமுக-வினரோடு பேசும் டெல்லி! – எடப்பாடி சாதித்த பின்னணி – படிப்புக்கான முதலீடு

17

ஆருத்ரா ‘பலி ஆடு’… திமுக-வினரோடு பேசும் டெல்லி!

அமர், அண்ணாமலை

ருத்ரா கோல்டு நிறுவனத்தின் பண மோசடி விவகாரம் தொடர்பாக ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரும், தமிழ்நாடு பா.ஜ.க-வின் விளையாட்டுப் பிரிவில் மாநிலச் செயலாளராக இருந்தவருமான ஹரீஷ் என்பவரைக் கைதுசெய்திருக்கிறது பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ்.

இவரின் கைது விவகாரம், பா.ஜ.க மாநில விளையாட்டுப் பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி முதல் மாநிலத் தலைவர் அண்ணாமலை வரை விசாரணை வெளிச்சத்தைத் திருப்பியிருக்கிறது.

தமிழ்நாடு பா.ஜ.க-வுக்குள் ஹரீஷின் கைது எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது..?

அண்ணாமலை, அமர் இருவருக்கும் இதனால் ஏற்பட்டிருக்கும் சிக்கல் என்ன..?

களமிறங்கி விசாரித்தோம். விசாரணையில் கிடைத்த கிறுகிறுக்க வைக்கும் தகவல்கள் இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழின் கவர் ஸ்டோரியில்…

படிக்க இங்கே க்ளிக் செய்க…

கிசுகிசு: “சந்திப்பு வேண்டாம்” – முதன்மையானவருக்கு வந்த டெல்லி மெசேஜ்!

படிக்க இங்கே க்ளிக் செய்க…

“வெற்றிக்கு கைகொடுத்த மூவர்” – எடப்பாடி சாதித்த பின்னணி..!

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க-வின் பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச் செயலாளராக முறைப்படி அறிவிக்கப்பட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

“இந்த வெற்றியில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோரின் பங்கு முக்கியமானது” என்கிறார்கள் விவரமறிந்த அ.தி.மு.க சீனியர்கள்.

இது குறித்து விவரிக்கும் விரிவான கட்டுரையை வாசிக்க இங்கே க்ளிக் செய்க…

‘கடைசிப் பந்தில்கூட ஆட்டம் மாறும்’ – ஓ.பி.எஸ் தரப்பின் நம்பிக்கைக்கு காரணம் என்ன?!

படிக்க இங்கே க்ளிக் செய்க…

அன்று பாட்டி… இன்று பேரன் – 1975-ல் இந்திரா காந்திக்கு நடந்தது என்ன?!

இந்திரா காந்தி, ராகுல் காந்தி

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் விதித்த விவகாரம் பல கேள்விகளை எழுப்புவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இத்தகைய சூழலில் தற்போது பலரும், 1975-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்படும் சூழல் ஏற்பட்டதும், அப்போது உடனடியாக அவர் என்ன செய்தார் என்பது குறித்துப் பரவலாகப் பேசி வருகின்றனர்.

அப்படி இந்திரா காந்தி என்ன செய்தார்..?

விரிவான ஃப்ளாஷ்பேக் ஸ்டோரியை படிக்க இங்கே க்ளிக் செய்க…

IPL 2023 Preview: சாம்பியனாக தோனிக்கு விடைகொடுக்குமா சிஎஸ்கே?

IPL 2018

ரவிருக்கும் ஐ.பி.எல் தொடரை முன்னிட்டு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி பரபரப்பாக இறுதிக்கட்ட பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

அந்தப் பயிற்சிகளைப் பார்வையிட கூடியிருந்த அத்தனை ரசிகர்களின் மனதிலும் ஒரே ஒரு கேள்வியும் ஏக்கமும்தான் அதிகம் குடிகொண்டிருந்தது. அது, ‘சிஎஸ்கே மீண்டும் சாம்பியனாகுமா?’ என்பதே!

2018 மற்றும் 2021 ஆகிய சீசன்களில் பெரும் வீழ்ச்சியிலிருந்து சிஎஸ்கே மீண்டு வந்து சாம்பியனாகியிருந்தது. அதேபோன்றதொரு சம்பவத்தை சிஎஸ்கே இந்த சீசனிலும் செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ரசிகர்களின் எண்ணம் ஈடேறுமா?

விரிவான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

படிப்பு, திருமணம்… கைகொடுக்கும் முதலீட்டுத் திட்டம்!

முதலீடு

ம் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும்; ஊரே மெச்சும்படி அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிற ஆசை இல்லாத பெற்றோர்களே இருக்க முடியாது.

இந்த ஆசைகளைப் பல பெற்றோர்கள் கடன் வாங்கிதான் நிறைவேற்றுகிறார்கள்.

அது மாதிரியான சூழல் வராமல் தடுக்க எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து

நிதி ஆலோசகர் ஏ.எஸ்.முரளிதரன் சொல்லும் ஆலோசனைகளைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…

ஆரோக்கியமாக வாழ வைட்டமின் மாத்திரைகள் அவசியமா?

மாத்திரைகள்

ரோக்கியமான வாழ்க்கைக்கு வைட்டமின்கள் அவசியம், ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் வாழ வைட்டமின் துணைமருந்துகளை எடுக்க வேண்டியது அவசியமா..?

கொழுப்பில் கரையக்கூடியது மற்றும் நீரில் கரையக்கூடியது என இரண்டு வகை வைட்டமின்கள் உள்ளன.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

மாஞ்சோலை : ‘கூலி 2 ரூபாய்; அபராதம் 200 ரூபாய்’ – ‘1349/2 எனும் நான்’

மாஞ்சோலை எஸ்டேட்

1920-களின் பிற்பாதியில் போதிய மழை இல்லாமல் திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவியது.

“ஏ கேள்வி பட்டியா? அம்பாசமுத்திரம் மலைக்கு மேல புதுசா ஒரு எஸ்டேட் வரப்போவுதாம். சொன்ன சொல்ல காப்பாத்துத வெளிநாட்டு தொர மாருக தான் மொதலாளியாம். இங்க அடிக்க மாறி, ஆள சுட்டெரிக்கும் வெயில் அங்க இருக்காதாம். மனுசன் கால் படாத அடர்ந்த வனத்துலதான் வேலையாம்…”

மாஞ்சோலை எஸ்டேட் உருவானதின் பின்னணியில் இருந்த சாமான்யர்களின் உழைப்பையும், அவர்களின் வாழ்வியலையும் பேசும்

தொடரை படிக்க இங்கே க்ளிக் செய்க…

‘காட்டுமல்லி’ டியூன்… இளையராஜாவின் ரெக்கார்டிங்… உருகும் அனன்யா! 

இளையராஜா, அனன்யா

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து மார்ச் 31-ல் வெளியாகவிருக்கும் படம் விடுதலை இடம்பெற்றுள்ள ‘வழி நெடுக காட்டுமல்லி’ எனும் பாடலைதினமும் ரிப்பீட் மோடில் கேட்டு ரசிகர்கள் அனைவரும் வைப் ஆகிக்கொண்டிருக்கிறார்கள்.

‘விடுதலை ‘ஆல்பத்தில், இளையராஜா குரலுக்கு இணையாகப் பாடியிருக்கும் அந்த இனிமையான குரல் பாடகி அனன்யா உடையது!

இளையராஜாவின் ரெக்கார்டிங் செஷன் பற்றி அனன்யாவின் சுவாரஸ்ய பகிர்தலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

மிஸ்டர் மியாவ்: தனுஷிடம் வாய்ப்பு கேட்கும் செல்வராகவன்!

சுவாரஸ்யமான சினிமா செய்திகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

 

Author: Mukilan P

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.