காபூல்: மவுலவி அப்துல் கபீரை ஆப்கானிஸ்தானின் பிரதமராக தலிபான்கள் நியமித்திருக்கிறார்கள். 2020-ஆம் ஆண்டு தோஹா ஒப்பந்ததத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திய தலிபான்கள் குழுவில் முக்கியமாக பங்காற்றியவர் அப்துல் கபீர்.
அமெரிக்க தலையீட்டால் ஆப்கானிஸ்தானில் 2001-ஆம் ஆண்டு தலிபான்களின் ஆட்சி நீக்கப்பட்டது. அப்போது, அங்கு அதிகாரமிக்க பதவியில் கபீர் இருந்தார். கபீர் மீது ஐக்கிய நாடுகள் சபை பொருளாதாரத் தடைகள் விதித்தது. இதனால் கபீர் பாகிஸ்தானுக்கு தஞ்சம் புகுந்தார். இதன் தொடர்ச்சியாக, தலிபான்கள் கடந்த 2021 ஆகஸ்ட்டில் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முல்லா முகமது ஹசன்தான் ஆப்கானிஸ்தானில் ஆட்சி பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், கபீருக்கு பிரதமர் பதவியை தலிபான்கள் வழங்கி உள்ளனர்.
மவுலவி அப்துல் கபீரை ஆப்கானிஸ்தானின் பிரதமராக தலிபான்கள் நியமித்திருக்கிறார்கள். 2020-ஆம் ஆண்டு தோஹா ஒப்பந்ததத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திய தலிபான்கள் குழுவில் முக்கியமாக பங்காற்றியவர் அப்துல் கபீர்.
Author: செய்திப்பிரிவு